fbpx

கோயிலின் 6வது அறையில் மறைந்துள்ள மர்மம்.! அறையை திறந்தால் நாடே சாபத்திற்கு உள்ளாகும்..!

கேரளாவில் உள்ள பத்மனாபசாமி திருக்கோயில் சிறப்பு வாய்ந்த மற்றும் உலகளவில் பிரபலமடைந்த கோயில் ஆகும். கோயிலைப் பற்றி வெளிவந்த விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. அனந்த சயன கோலத்தில் காட்சி தரும் பத்மனாபசாமி திருக்கோயிலில் திருவிதாங்கூர் அரசர் தனது முழு சொத்துக்களையும் ஒப்படைத்தார் என்று கூறப்பட்டு வருகிறது.

பத்மனாபசாமி திருக்கோயிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்டதிலிருந்து மன்னராட்சி முடிவுக்கு வரும் வரை 21 குண்டுகள் முழங்க அரசு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் பணக்கார கோயிலாக கூறப்பட்டு வரும் பத்மனாபசாமி கோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இன்று வரை யாருக்கும் தெரியாது.

பத்மனாபசாமி திருக்கோயிலில் 6 அறைகளில் பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கோயிலின் சொத்து மதிப்பை அறிவதற்காக சுப்ரீம் கோர்ட் ஆர்டரின் பெயரில் 5 பேர் கொண்ட குழு நிர்வாகிக்கப்பட்டு கோயிலில் உள்ள இந்த 6 அறையையும் திறந்து பார்க்க முடிவு செய்தது.

பூமிக்கு அடியில் 5 அடி ஆழத்தில் A முதல் F வரை உள்ள அறைகளை இதுவரை 1990 ஆம் ஆண்டு 2முறையும் 2002ஆண்டு 5 முறை மட்டுமே திறந்து உள்ளனர். இதில் B அறை இதுவரை திறக்கப்படவில்லை. இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் 7 கிலோ மதிப்புடைய 1700 தங்க காசுகள் கிடைத்துள்ளன. மேலும் நெப்போலியன் காலத்து நாணயங்களும், விலைமதிப்பற்ற பட்டு துணிகள், ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை திறக்கப்படாத மர்மமாக உள்ள B அறையை திருவிதாங்கூர் அரசு குடும்பம் திறப்பதற்கு அனுமதிக்கவில்லை. மேலும் இந்த அறையை திறந்தால் நாடே சாபத்திற்கு உள்ளாகும், கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டியது இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் இன்று வரை மர்மங்கள் நீடிக்கும் கோயிலாகவே பத்மனாபசாமி கோயில் இருந்து வருகிறது. மேலும் பல சக்தி வாய்ந்த மந்திரங்களாலும், பாம்புகளாலும் இக்கோயிலின் அறை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.

Rupa

Next Post

தினமும் ஒரு முறையாவது பெருமாளின் இந்த ஸ்லோகத்தை படிங்க.! வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.!

Wed Jan 24 , 2024
1. கஷ்டங்கள் நீங்க ஸ்ரீ வெங்கடேச கராவலம்பம் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.2. ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு  துக்கமோசக அச்சுத அஷ்டகம் மந்திரத்தை தினமும் கூற வேண்டும்.3. நினைத்தவை எல்லாம் நடக்க, புண்ணிய பலன்கள் கிடைக்க தினமும் ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் மந்திரத்தை படிக்க வேண்டும்.4. வாழ்வில் சகல மங்களகரமான விஷயங்களை பெறுவதற்கு ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம் மந்திரத்தை பெற்றோர்களை நினைத்தும், கடவுளை நினைத்தும் தினமும் படித்து வர […]

You May Like