வீட்டை பராமரிப்பது சாதாரண காரியம் இல்லை. குறிப்பாக, கிட்சனை சுத்தமாக வைத்திருப்பது என்பது தனி கலை தான். பல மணி நேரம் நாம் செலவு செய்தால் தான், வீடும் கிச்சனும் சுத்தமாக இருக்கும். இதனால் இல்லத்தரசிகளுக்கு நாள் முழுவதும் அதிக வேலை இருக்கும். ஓய்வு எடுக்க கூட நேரம் இல்லை என்று புலம்பும் அநேகர் உள்ளனர். ஆனால், இனி நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். ஒரு சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றினால் நம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அவை என்னவென்று தற்போது நாம் காணலாம்.
வெண்டைக்காய் வாங்கி வந்த சில நாட்களிலேயே வாடி விடும். இதனை தடுக்க, சிம்பிள் டிப்ஸ் இருக்கு. ஆம், வெண்டைக்காயை வாங்கி வந்த உடன், அதன் மேற்புறம் மற்றும் அடிப்பகுதியை வெட்டி எடுத்து விட வேண்டும். பின்னர், வெள்ளை காட்டன் துணி ஒன்றில், வெண்டைக்காயை சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதனால் எத்தனை நாள் ஆனாலும் வெண்டைக்காய்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
நமது வீட்டில் இருக்கும் இரும்பு கடாயை சுத்தம் செய்வதற்குள் கை வலியே வந்து விடும். ஏனென்றால், இரும்பு கடாய் எளிதாக துரு பிடித்து விடும். இதனை சுலபமாக நீக்க ஒரு வழி உள்ளது. இதற்கு, துரு பிடித்த இரும்பு கடாயில் ஒரு ஸ்பூன் கோலமாவு, சிறிது விம் லிக்யூட், ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்து தேய்த்து கழுவுங்கள். இப்படி செய்தால் உங்கள் பழைய இரும்பு கடாயில் உள்ள துருக்கள் நீங்கி புதுசு போல் ஜொலிக்கும்.
பொதுவாக நம்மில் பலர் கறிவேப்பிலைகளை அதிகம் வாங்கி வைத்து விடுவோம். இதனால் பல நேரங்களில் கறிவேப்பிலை வாடி போய் விடும். ஆனால், கறிவேப்பிலை சீக்கிரம் வாடி போகாமல் இருக்க ஒரு ட்ரிக் இருக்கிறது. இதற்கு பழைய கூல்ட்ரிங் பாட்டிலின் மேற்பகுதியை பாதியாக வெட்டி, அதற்குள் சிறிது தண்ணீர் ஊற்றுங்கள். இப்போது கறிவேப்பிலைகளை காம்பில் இருந்து எடுக்காமல், அப்படியே பாட்டிலில் போட்டு மூடி வையுங்கள். நீங்கள் இப்படி செய்தால் கறிவேப்பிலை சீக்கிரம் வாடி போகாமல் இருக்கும்.
Read more: வீட்டில் இருந்து கேட்ட முனங்கள் சத்தம், வாடகைக்கு வீடு எடுத்து 57 வயது ஆன்டி செய்த காரியம்..