திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சூழல் ஏற்பட்டுள்ளது. ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் டைம்ஸ் லாக் டோக்கன் வழங்கி வருகின்றனர். வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரூ.15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட நாளில் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன் விநியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன் வழங்குவதை அறியாத பக்தர்கள் நேராக திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் நிலவுவதால் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால், தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்கின்றனர். டோக்கன் வாங்காமல் நேரடியாக செல்லும் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.