fbpx

உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற வேண்டுமா..? இனி ஏசி, ஏர் கூலர் தேவையில்லை..!! இந்த ஒரு பொருள் போதும்..!!

தினமும் கொளுத்தும் வெயில் தாங்க முடியாத எரிச்சலையும், வெக்கையையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மாலையில் இருக்கும் வெப்பத்தின் தாக்கம் வியர்வையிலேயே நம்மை குளிப்பாட்டி விடுகிறது. இப்படியான சூழலில் நிம்மதியான உறக்கத்திற்கு எங்கே போவது..? அதுவும் நாள் முழுவதும் களைத்து சோர்வாக இருப்போருக்கு இது மிகவும் கடினம் தான். இதற்காகத்தான் பலரும் வீட்டில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலருக்கும் இது சாத்தியமில்லாத பொருளாதார சிக்கல் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையாக உள்ள மிடில் கிளாஸ் குடுப்பத்தினருக்கு ஏர் கூலர் கூட வாங்க முடியாத சூழல் இருக்கும். இருப்பினும் நீங்கள் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு ஏசி தரத்தில் குளுகுளு காற்று வேண்டுமெனில் இந்த டிப்ஸை தினமும் இரவு ஃபாலோ பண்ணுங்க.

வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ள ஏசியோ, ஏர் கூலரோதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ஐஸ் கட்டி இருந்தால் கூட போதும். தூங்கும் போது ஜன்னல் முன் டேபிள் ஃபேன் வையுங்கள். பின் ஒரு கிண்ணம் முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை ஃபேன் உள்ள டைரக்‌ஷனில் வைக்கவும். வழிய வழிய வைக்க வேண்டாம். பின் ஐஸ் கட்டி உருகி தண்ணீர் கீழே வடியத்தொடங்கும். எனவே அதற்கு ஏற்ப வையுங்கள். இவ்வாறு செய்வதால் குளுமையான காற்று கிடைக்கும். அதோடு அறையும் குளுமையாக மாறிவிடும்.

இந்த முறை பின்பற்றப்பட்டால், அறையை குளிர்விக்க அதிக நேரம் எடுக்காது. அதேசமயம் ஐஸ் கட்டிகள் கரைந்துவிட்டால் உடனே அறை வெப்பமாகிவிடும். எனவே அவ்வப்போது எழுந்து உருகிய நீரை ஊற்றிவிட்டு மீண்டும் ஐஸ் கட்டிகளை கொட்டி வையுங்கள். இவ்வாறு செய்ய அறை இரவு முழுவதும் குளுர்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் வெக்கை இல்லாத நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

Chella

Next Post

தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெளுத்து வாங்கிய வெயில்……!

Fri Apr 21 , 2023
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சித்திரை மாதம் பிறந்த நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த விதத்தில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 16 மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோடு மதுரை விமான நிலையம் போன்ற பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. வேலூர் திருச்சி கரூர் போன்ற மாவட்டங்களில் […]

You May Like