திருமாவளவன் கார் மோதல்… வழக்கறிஞர் மீது தாக்குதல்…! விசாரணைக்குழு அமைத்து உத்தரவு…!

vck 2025

சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு.


கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு தகாராறு செய்யவே, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உயர் நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி’ என்பது தெரியவருகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில். உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாகதமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திட வேண்டுமென என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

சம்பளம் வரலையா.. பணி நீக்கம் செய்வதாக அடிக்கடி முதலாளி மிரட்டுறாரா..? உடனே இத செய்ங்க..!

Fri Oct 17 , 2025
Salary not coming.. Is your boss often threatening to fire you? Do this immediately..!
layoff

You May Like