இதே நாள் 9/11!. உலகையே உலுக்கிய இரட்டை கோபுரத் தாக்குதல்!. இன்று 24-வது நினைவு தினம்!.

Twin Towers collapse 911 attacks 1

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.


அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் தீவிரவாத குழுவினர் ஹைஜாக் செய்தனர். அதன்பிறகு நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் உள்ள கட்டடங்களை தாக்குவதற்கான ஒரு ஏவுகணை போல அந்த விமானங்கள் செயல்பட்டன. இரு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்கின. முதல் விமானம் நார்த் ட்வர் என்று சொல்லப்படும் கட்டடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது. இரண்டாவது விமானம் சவுத் டவரை 9.03 மணிக்கு தாக்கியது.

கட்டடம் தீப்பற்றி எரிந்தது. கட்டடத்தின் மேல் மாடிகளில் பலர் சிக்கி தவித்தனர். புகை நகரம் முழுவதும் சூழ்ந்தது. இரண்டே மணி நேரத்தில் 110 மாடி கட்டடமும் சரிந்து விழுந்து புகை மண்டலத்தை உருவாக்கியது. 9.37 மணியளவில் மூன்றாவது விமானம் பென்டகனின் மேற்கு பகுதியை தாக்கியது. பென்டகன் என்பது அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட தலைமையகம். இது நாட்டின் தலைநகரமான வாஷிங்டன் டி.சியில் உள்ளது.

நான்காவது விமானம் பென்னில்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் நொறுங்கி விழுந்தது. ஆனால் இந்த விமான நாடாளுமன்ற கட்டடமான கேபிட்டலின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் சண்டையிட்டதால் அது வயல்வெளியில் மோதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எத்தனை பேர் உயிரிழந்தனர்? மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள். இதில் விமானத்தை கடத்தியவர்கள் 19 பேர் சேர்க்கப்படவில்லை. விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். இரட்டை கோபுரத்தில் 2606 பேர் உயிரிழந்தனர். பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமியவாத கடும்போக்கு இயக்கமான அல் கய்தா, ஆப்கானிஸ்தானிலிருந்து ஒசாமா பின் லேடனின் தலைமையில் இந்த தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் முஸ்லிம் நாடுகளில் சண்டையை உருவாக்குவதாக அந்த இயக்கம் குற்றம் சாட்டியது. விமானத்தை கடத்திய செயலில் 19 பேர் ஈடுபட்டனர். மூன்று குழுக்களாக ஐந்து பேர் இருந்தனர். பென்னிசில்வேனியாவில் மட்டும் நான்கு பேர் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் விமான இயக்க தெரிந்த ஒருவர் இருந்தனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள விமானிகள் பயிற்சி பள்ளியில்தான் பயிற்சி பெற்றனர்.

அமெரிக்காவை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 11, 2025 வியாழக்கிழமை, நியூயார்க் நகரில் உள்ள 9/11 நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் . வருடாந்திர நினைவேந்தல் நிகழ்வில் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்படும், இது 1993 உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 3,000 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஒன்றிணைக்கும்.

Readmore: மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

KOKILA

Next Post

முதலிடத்தில் திமுக.. இரண்டாவது இடத்தில் தவெக.. இப்படியே போனால் பாஜக நிலைமை இதுதான்..!! - அண்ணாமலை பேச்சால் பரபரப்பு..

Thu Sep 11 , 2025
DMK in first place.. Tvk in second place.. If it continues like this, this is the situation of BJP..!! - Annamalai
annamalai

You May Like