“கருணாநிதி குடும்பத்திற்கு இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல்.. திமுக ஆட்சி அகற்றப்படும்..” NDA பொதுக்கூட்டத்தில் இபிஸ் பேச்சு..!

eps speech nda

திருச்சி பஞ்சப்பூரில் இன்று என்.டி.ஏ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்..


இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது “ 2 நாட்களுக்கு முன்பு தான் திருச்சியில் திமுக மாநாடு நடைபெற்றது.. அந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அதிமுக கூட்டணியை விமர்சித்திருந்தார்.. ஆனால் ஆதிமுக + தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வலிமையான கூட்டணி அமைந்திருக்கிறது..

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உடனான நீண்ட இழுபறிக்கு பின் கூட்டணி அமைந்துள்ளது.. கிட்டத்தட்ட 20 நாட்கள் திமுக காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.. அதன்பின்னர் தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸிடம் கெஞ்சி தான் திமுக கூட்டணி அமைத்துள்ளது.

ஆனால் அதிமுக , தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அற்புதமான கூட்டணி.. வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் ஒரு அற்புத ஆட்சியை அமைப்போம்.. ஸ்டாலின் எத்தனை முறை கூட்டம் போட்டாலும் மக்கள் உங்களை நம்பப் போவதில்லை.. திமுக 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு அறிவிப்பு கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை..

தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிவிப்பு வரும்.. தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள். மக்களை வாட்டி வதைக்கும் அராசாக திமுக அரசு இருக்கிறது.. தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி என்று ஸ்டாலின் கூறுகிறார்.. ஆனால் அவருக்கு மறதி வந்துவிடும்.. நடக்கப்போகும் தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார்.. இந்த தேர்தல் மாநிலத்தில் யார் ஆட்சி செய்யப் போகிறார் என்பதை தேர்வு செய்யும் தேர்தல்.

திமுகவின் கொள்கையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கையும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளும் ஒன்றா? திமுகவின் கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா..? பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளுடன் தான் திமுக கூட்டணி வைத்துள்லது.

திமுக என்பது குடும்ப கட்சி.. அந்த குடும்பத்தில் இருக்கிறவர்கள் கட்சிக்கு தலைவராகவும், அவர் ஆட்சிக்கு வர முடியும்.. அப்படிப்பட்ட குடும்பத்தை தமிழக மக்கள் விரட்டியடிக்க போகிறார்கள்.. கருணாநிதி குடும்பத்திற்கு இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்.. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே குரல் தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்பது மக்களுக்கு தெரியும்.. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்..” என்று தெரிவித்தார்..

Read More : “திமுக ஆட்சியை வீழ்த்த குஜராத்தில் இருந்து பிரதமர் மோடி வந்துள்ளார்..” NDA பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு..!

RUPA

Next Post

“ திமுகவின் ஊழல் மாடல் அரசு, ஒரு குடும்பத்தின் ஏடிஎம் எந்திரமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டது..” திருச்சியில் பிரதமர் மோடி சாடல்..!

Wed Mar 11 , 2026
திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் “ வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மருதிருவர் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்.. மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.. ஆட்சி அதிகாரத்தில் […]
modi in trichy

You May Like