பானிபட்டில் உள்ள ஜட்டல் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு மற்றும் உடல் ரீதியான தண்டனை குறித்து மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் 2-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் கயிறுகளால் கட்டப்பட்டு, ஜன்னலில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, பள்ளி ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்படுவதை பார்க்க முடிகிறது… வீட்டுப்பாடம் செய்யாததற்காக சிறுவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் மற்றொரு வீடியோவில் ஒரு ஆசிரியை ஒரு மாணவியை அடிப்பதையும் பார்க்க முடிகிறது..
சிறுவனின் தாயார் பேசிய போது “ என் குழந்தை இப்போதுதான் சேர்க்கப்பட்டிருந்தது. அவனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தலைமையாசிரியர் டிரைவரை அழைத்து அவனைத் தண்டித்தார். அவர்கள் ஒரு குற்றவாளியைப் போல அவனை சித்திரவதை செய்தனர்,” என்று குற்றம் சாட்டினார்.
மாடல் டவுன் காவல் நிலைய போலீசார், ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம், 2015 இன் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். “கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.
இந்த பள்ளி பெரும்பாலும் குழந்தைகளை கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் முறையான தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது என்று ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
“இது ஒழுக்கம் அல்ல, இது காட்டுமிராண்டித்தனம். குழந்தை பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதற்கு பள்ளிகள் பொறுப்பேற்க வேண்டும்,” என்று குழந்தை உரிமை ஆர்வலர் மீனா சர்மா கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை கண்டிப்பாக தடைசெய்கின்றன, ஆனால் அமலாக்கம் பலவீனமாகவே உள்ளது. பாதுகாப்பான கற்றல் இடங்களை உறுதி செய்வதற்கான அவசர சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை இந்த சம்பவம் தூண்டியுள்ளது.