தங்கம் வாங்க இதுதான் செம சான்ஸ்.. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,315-க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000க்கு விற்பனையாகிறது.. தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..

RUPA

Next Post

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டு தள்ளிய மனைவி…..! தானாக வந்து சிக்கி பலியான நண்பர்….!

Wed Feb 15 , 2023
சமூகத்தில் இருக்கும் நபர்களை தடம் மாறி போக வைப்பது இரண்டே விசயம் தான் ஒன்று முறையற்ற ஆசை, மற்றொன்று மது இந்த இரண்டும் இல்லாமல் போனால் சமூகம் நன்னெறியை நோக்கி நடைபோடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது, முறையற்ற ஆசை, முறையற்ற உறவு இவையாவும் இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்ற அளவில் தான் தற்போதைய சமுதாயம் இருந்து வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை எடுத்துள்ள நடராஜகுலத்தை […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like