“இது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.. பொதுமக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு..” அண்ணாமலை காட்டம்..!

Annamalai Vs Stalin Updatenews360 1

ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் திரு ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.

தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : “கிங் மேக்கர் இல்லை.. நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்..” ஜனநாயகன் படம் குறித்தும் முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!

RUPA

Next Post

உங்கள் ஃபோனில் இந்த 3 செயலிகளும் இருக்கா..? அவை தரவுகளை திருடுகின்றன.. உஷார்..!

Sat Jan 31 , 2026
இன்று, ஸ்மார்ட்போன்களே நமது தனிப்பட்ட தகவல்களின் மிகப்பெரிய ஆதாரமாக மாறியுள்ளன. தங்கள் ஃபோன்களில் உள்ள செயலிகள் பாதுகாப்பானவை என்றும், தங்கள் தரவுகளின் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு இருப்பதாகவும் பல பயனர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பல செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் அறியாமலேயே கசியவிடுகின்றன. இந்தச் செயலிகள் பயனர்களின் இருப்பிடம், சாதனத் தகவல், செயலி பயன்பாட்டுப் பழக்கவழக்கங்கள் மற்றும் இணையப் பயன்பாட்டு முறைகள் போன்ற முக்கியமான […]
mobile app

You May Like