இதுதான் சரியான வாய்ப்பு..!! தங்கத்தின் மீது இப்படி முதலீடு செய்து பாருங்கள்..!! பணம் கொட்டும்..!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் காலாண்டில் தங்கம் விலை சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். CNBC-இல் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்ற விக்னஹர்டா கோல்டு நிறுவனத்தின் தலைவர் மகேந்திர லூனியா, 2030ஆம் ஆண்டிற்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 லட்சத்தை எட்டும் என்று கூறியுள்ளார். அப்படியானால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக இருக்கும்.

தங்கத்தின் இந்த கடும் விலை உயர்வுக்கு சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்சனைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை காரணமாக உள்ளது. மேலும், பண வீக்கம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பங்குச்சந்தை கணிக்க முடியாததாக உள்ளதால், தங்கம் விலை குறையும் என எதிர்ப்பார்க்க முடியாது. மாறாக தங்கத்தின் விலை உயர்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவற்றில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு தங்கப் பத்திரங்களை ஏலம் விடும். அதில், நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதுவே, அறக்கட்டளைக்கு வாங்க விரும்பினால் 20 கிலோ கிராம்கள் வரை வாங்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : இந்த சமயத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

Chella

Next Post

BREAKING: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

Tue Apr 23 , 2024
சென்னை என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் முதல் இடம் சென்ட்ரல் ரயில் நிலையம்தான். இப்படி தலைநகர் சென்னையின் அடையாள சின்னமாக விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாளொன்றுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். சென்னையை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் இந்த ரயில் நிலையத்தை கடக்காமல் பணிக்கு செல்ல முடியாது. அப்படி ஹாட்ஸ்பாட் இடமாக இருக்கும் இந்த இடத்தில் இன்று காலை மிகவும் பயங்கரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் […]

You May Like