பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவர் இவர் தான்…! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை…!

anbumani 2025

தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் கடந்த செப்.24-ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கான எனது கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், பாமகவின் சட்டப்பேரவை குழுவுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க பேரவைத் தலைவர் அப்பாவு தொடர்ந்து மறுத்து வருகிறார். நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், அரசியல் காரணங்களுக்காக அறம் மற்றும் மரபுகளை மதிக்காமல் செயல்படுவது நியாயமல்ல. பேரவைத் தலைவரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

இனியாவது பேரவைத் தலைவர் அறத்துக்குப் பணிந்து நீதியை மதிக்க வேண்டும். அந்த வழியில் பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக சதாசிவம், கொறடாவாக சி.சிவக்குமார் ஆகியோரை அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உங்கள் விரல் மூட்டுகள் கருமையாக உள்ளதா?. இதுதான் காரணம்!. இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

Sun Oct 19 , 2025
உங்கள் விரல் மூட்டுகள் கருமையாகவோ, வறண்டதாகவோ அல்லது உரிந்து விழுவதாகவோ மாறினால், அது தூசி அல்லது தோல் பதனிடுதல் மட்டுமல்ல. சில நேரங்களில், ஊட்டச்சத்து குறைபாடுகளும் இதற்குக் காரணம். குறிப்பாக வைட்டமின் பி12, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ குறைபாடுகள், சீரற்ற தோல் நிறத்திற்கும், விரல் மூட்டுகள் கருமை அல்லது பழுப்பு நிறத்திற்கும் வழிவகுக்கும். மேலும், சோப்பு அல்லது சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது இன்சுலின் […]
knuckles dark

You May Like