Heart attack: பயமுறுத்தும் டேனியல் பாலாஜி மரணம்!… இளம் வயது ஆண்களுக்கு மாரடைப்பு வர இதுதான் காரணம்!

Heart attack: மோசமான வாழ்வியல் பழக்கங்கள் தான் இளம் வயது மாரடைப்புக்கு காரணம் என்று சொல்லலாம். எனினும், மரபு ரீதியிலான காரணங்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. ஸ்ட்ரெஸ் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவும் இதயம் தொடர்புடைய நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறலாம். அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது, ஆரோக்கியமான பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்றவை இந்த அபாயத்தை தடுக்க உதவும்.

இந்தநிலையில், நேற்று நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 48. இவரை போன்ற இளம் வயது மாரடைப்பால் ஏற்படும் மரணத்தை தடுக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: டேனியல் பாலாஜியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல். இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மாரடைப்பை கட்டுப்படுத்த கருஞ்சீரகத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கருஞ்சீரகம் ரத்த உறைதலை தடுக்கும். இவ்வாறு கருஞ்சீரகத்தின் பயன்களை டாக்டர் ஆஷா தெரிவித்திருந்தார். கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்த பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினைன் என்ற வேதிப்பொருள் உள்ளது.

இது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது.

சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும்.

Readmore: Annamalai: டிஆர் பாலுவின் மனைவி சொத்து மதிப்பு 450% உயர்ந்துள்ளது!… பட்டியலை வெளியிட்டு சவால் விட்ட அண்ணாமலை!

Kokila

Next Post

Napkin: குட்நியூஸ்!... ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின்!… ஒரு பாக்கெட்டில் 10 பேட்ஸ்!… விலை, எங்கு கிடைக்கும் முழுவிவரம் இதோ!

Sun Mar 31 , 2024
Napkin: கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உயர்தரமான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஜன ஆவுஷாதி சுவிதா ஆக்ஸோ திட்டத்தின் மூலம் ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மத்திய அரசு Aushadhi Suvidha Oxo-Biodegradable (மட்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான) சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை […]

You May Like