Isreal: போருக்கு பின் காஸாவின் நிலை இப்படிதான் இருக்கும்!… பிரதமர் அலுவலகம் தகவல்!

Isreal: போருக்கு பிறகு ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதே விவரங்கள் அந்நாட்டு அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கையில் போருக்கு பிறகு, காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேல் பங்கு குறித்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி போர் நிறைவுற்று, ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், காசா முழுக்க இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். காசாவிற்குள் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவப்படும். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடம் நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore:Baltic Sea: கடலுக்கு அடியில் ராட்சத அதிசயம்..! 11,000 ஆண்டுகள் பழமையானது..! விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

Kokila

Next Post

Canada: கரை ஒதுங்கிய குப்பையில் கிடைத்த அதிசயம்!… 8 மாதங்களுக்கு பிறகு தொலைந்த பொருள் கிடைத்ததால் நெகிழ்ச்சி!

Sat Feb 24 , 2024
Canada: கடலில் தொலைத்த பணப்பை 8 மாதங்களுக்கு பிறகு கரை ஒதுங்கிய குப்பையுடன் கிடைத்ததால் இளம்பெண் நெகிழ்ச்சியடைந்துள்ளார். கொலம்பியாவில் டோபினோவுக்கு அருகில் உள்ள தீவில் வசித்து வருபவர் மார்சி கால்வேர்ட்டு. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தனது பணப்பையைக் கடலில் தவறவிட்டுள்ளார். அந்த பையில் முக்கிய ஆவணங்கள், கார்டுகள் மற்றும் பணம் இருந்ததால் நீச்சல் தெரிந்த நபர்கள் மூலம் கடற்பகுதியில் […]

You May Like