தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தனர். இதற்கிடையே தேர்தலுக்கான மிக முக்கியமான கட்டமான வேட்புமனு தாக்கல் தொடங்கிறது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியில் தேர்தல் நடந்தும் அலுவலர்களிடம் தங்களது மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பழனிச்சாமி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரேமலதா காட்டிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேமுதிக கூட்டணி மாறியதால் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை. தேமுதிகவுக்கு 0.5 சதவீதம் வாக்கு வங்கி இருப்பது உண்மைதான் என்றார்.
மேலும் ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.. அது இந்தியா முழுவதும் வைரலானது.. அதில் என்ன இருக்கிறதோ அவர் என்ன பேசினாரோ அதைத்தான் நான் சொன்னேன்.. கருணாநிதியை முக ஸ்டாலின் வீட்டு காவலில் வைத்திருந்தார் என்பதை நான் சொல்லவில்லை.. ஆர் ராசா சொன்னதைதான் நான் குறிப்பிட்டு பேசினேன்.. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது பாய்வது என்ன அர்த்தம்?’ என்று கேள்வி எழுப்பினார்.
Read more: ரிஸ்க் இல்லாத முதலீடு.. மாதம் ரூ.5,550 வருமானம்.. MIS திட்டத்தில் இத்தனை நன்மைகளா..?



