விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு மாணவிகளை வெளியூர் அழைத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பணையின் செயல்படுத்தும் விதமாக செயல்முறைகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு நடவடிக்கைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த செயல்முறைகள் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தொடர்புடைய அறிவுரைகள் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
எந்தவொரு பங்கேற்பாளரும் தனியாக கழிப்பறைக்குச் செல்லக்கூடாது. ஆசிரியர் அல்லது பயிற்சியாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாணவியுடன் செல்ல வேண்டும் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். அனைத்து விளையாட்டுப் பயிற்சிகளும் பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள் மற்றும் பெற்றோரின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும்; மாணவர்களின் விளையாட்டு அட்டவணையை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டு அணிக்கும் குறைந்தபட்சம் ஒரு பெண் ஆசிரியையாவது அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பாளர்களுடன் இருக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மாணவர்களின் புரிதல் நிலை வரை எச்சரிக்கை பலகைகளுடன் காட்டப்பட வேண்டும். மேலும், பங்கேற்பாளர்கள் எந்தவொரு நீர்வாழ் பகுதி அல்லது அரங்கத்திலும் நுழைய கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கடுமையான பின்னணி சரிபார்ப்பு மற்றும் உளவியல் பரிசோதனையை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.