இன்றைய காலகட்டத்தில், இதய நோய்கள் பெரியவர்களுக்கு மட்டும் அல்லாமல் சிறு குழந்தைகளிடமும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. இது சாதாரண நோயல்ல, உயிருக்கு ஆபத்தான ஒன்றாகும். எனவே, இதய நோய்களைத் தடுக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை எடுப்பது ஒவ்வொருவருக்கும் கடமை.
பொதுவாக பலர், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதால் இதயம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உணவு மட்டும் போதாது; உடற்பயிற்சியும் அவசியம். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய துடிப்பைத் தளரச்செய்து, நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. மாறாக, உடற்பயிற்சி இதயத்தை வலுவாகவும், இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யக்கூடியதாகவும் மாற்றுகிறது.
இன்றைய வேலை முறைமை பெரும்பாலும் “கணினி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது” என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது செயலற்ற வாழ்க்கை முறையை உருவாக்கி, இதய நோய்களின் அபாயத்தை பல மடங்கு உயர்த்துகிறது. ஆய்வுகள் காட்டுவதாவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு நோய் அபாயமும், இறப்பு சாத்தியமும் அதிகம் என்பதாகும்.
நிபுணர்கள் பரிந்துரைப்பது:
- தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது.
- நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற எளிய பயிற்சிகளில் தொடங்கி, படிப்படியாக தீவிர உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
- வாரத்திற்கு 4 முதல் 5 முறை பயிற்சி செய்தால், இதயம் 20 வயது இளைஞனின் உற்சாகத்துடன் செயல்படும்.
- வேலை செய்யும் இடங்களில், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் வேகமாக நடப்பது போன்ற சிறு பழக்கங்களும் இதயத்தைப் பாதுகாக்க உதவும்.
- படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் பழக்கம் கூட இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கியம், உணவின் மேல் மட்டுமே அல்ல; தொடர்ந்து செய்யப்படும் உடற்பயிற்சியின் மீதும் சார்ந்துள்ளது. உணவு, ஒழுக்கமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால்தான் ஆரோக்கியமான இதயத்தைப் பாதுகாக்க முடியும்.
Read more: பெண்கள் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் கடும் நடவடிக்கை.. கிம் ஜாங் உன் எச்சரிக்கை..!