கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரித்தும் பலனில்லை! குழவிக் கல்லை தலையில் போட்டு கொலை செய்த மகன்கள் தூத்துக்குடியில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

அந்த காலத்தில் ஒரு ஆண் 2 அல்லது 3 திருமணம் வரையில் செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினாலும், வீட்டிற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பலர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதைய இளைஞர்கள் பெரும்பாலும் அப்படி கிடையாது. ஆனால் தற்போதும் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.


கிராம பகுதிகளில் சொல்லும் பழமொழியை போல என்னதான் கிளியை போல் வீட்டில் மனைவி இருந்தாலும் குரங்கு போல ஒரு செட்டப்பை தேடி செல்வதை இன்னமும் சிலர் வழக்கமாகத்தான் கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவஞானபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(42) சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு தண்ணீர் விற்பனை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கணேசனுக்கு சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து 3 குழந்தைகள் இருக்கின்றன.

இப்படியான சூழ்நிலையில்தான், சென்ற வெள்ளிக்கிழமை கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கண்மாயில் உடல் முழுவதும் காயங்களுடன் கணேசன் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இது தொடர்பான தகவலை அறிந்துகொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் மனைவி சித்ராவிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது சித்ரா கணேசனுக்கு வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது எனவும், வாரத்தில் 3 நாட்கள் அங்கு தான் அவர் தங்குவார் எனவும், அவர்களிடம் விசாரணை நடத்தினால்தான் அவர் எப்படி உயிரிழந்தார் என தெரியவரும் என்று தெரிவித்து அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணையும் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் வீரவாஞ்சி நகரை சேர்ந்த அந்த பெண்ணின் கைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, அந்த கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி கிடந்தது. ஆகவே கணேசனை அந்த பெண் ஒரு சிலருடன் சேர்ந்து அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற விதத்தில் தங்களுடைய விசாரணையை காவல்துறையினர் ஆரம்பித்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், அந்த பெண் வீரவாஞ்சி நகரைச் சார்ந்த முருகன் என்பவரின் மனைவி துரைச்சி(40). என்பதும், 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய கணவர் உயிரிழந்தவுடன் கணேசனுடன் தொடர்பு ஏற்பட்டதும், தெரியவந்தது. துரைச்சிக்கு பாண்டி(19), அய்யனார்(15), ரமேஷ்(14) என்ற 3 மகன்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அந்த பெண்ணின் கைபேசியை சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்த ஆய்வில், அவர் நாகர்கோவில் அருகே உள்ள பழவூரில் இருப்பது தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த துரைச்சி மற்றும் அவருடைய 3 மகன்கள் உள்ளிட்டோரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், வாரத்தில் பல நாட்கள் கணேசன் துரைச்சியுடனே தாங்கி வந்திருக்கிறார். 7 வருடங்களுக்கு முன்னர் துரைச்சியின் மகன்கள் வயதில் சிறியவர்களாக இருந்ததால் விவரம் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது அவருடைய மூத்த மகன் பாண்டி மற்றும் அவருடைய சகோதரர்களுக்கு விவரம் தெரிந்து தன்னுடைய தாயையும், கணேசனையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணேசனை விட்டு துரைச்சி விலக தொடங்கியுள்ளார். ஆனால் இதனை கணேசன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு துரைச்சி வீட்டுக்கு வழக்கம் போல கணேசன் வந்திருக்கிறார். அவருடைய மகன்கள் முன்னிலையில் துரைச்சியை தனியாக தன்னுடன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதற்கு துரைச்சியின் மகன்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இனி வீட்டுக்கு வரக்கூடாது என்று கணேசனிடம் கூறியிருக்கிறார்கள்.

இதனால் கோபம் கொண்ட கணேசன், பாண்டியின் சகோதரரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனை பாண்டி தடுத்திருக்கிறார், அப்போது கணேசன் இன்று இரவுக்குள் உங்களுடைய தாயை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை 3 மணியளவில் தாயை கணேசன் கொலை செய்வதற்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த பாண்டி, வீட்டில் கிடந்த கிரைண்டர் குழவி கல்லை அவருடைய தலையில் 3 முறை போட்டிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி கணேசன் உயிரிழந்தார்.

அதன் பிறகு கணேசனின் உடலை ஆலம்பட்டி கண்மாயில் வீசிவிட்டு, தன்னுடைய தாயை அழைத்துக் கொண்டு, பழவூருக்கு தப்பி சென்று விட்டார்கள் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.

Next Post

’முதலிரவு என்றால் என்ன’...? வீடியோவுடன் மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்..!! சரமாரி அடி..!!

Sun Dec 11 , 2022
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை பெற்றோர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தாலுகாவில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் வழக்கம்போல் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். அப்போது, முதல் இரவு என்றால் என்ன? என்று மாணவ, மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், […]
mobile video

You May Like