தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 10 முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் அரசியல் ரீதியாக முக்கிய திருப்புமுனை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் வியூகங்களை தீவிரமாக வடிவமைத்து வருகிறது.
அதிமுகவின் மீண்டும் ஆட்சிக்கு வருகை தடுப்பதே இந்த புதிய வியூகத்தின் முக்கிய இலக்காக கூறப்படுகிறது. இதற்காக திமுக, 2021 தேர்தல் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பிலும், தொகுதி பங்கீட்டிலும் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 10 முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.



