நாளை இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும்…

நாளை தமிழ்நாடு , புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை தென்கிழக்கு ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் போர்ட் பிளேர்க்கு, மேற்கு வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவில் , சாகர் தீவுக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலுக்கு நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்..
பின்னர் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி காலை புயலாக வலுப்பெறுகின்றது.
இதனால் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இரவு நேரத்தில் நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகம் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 25ம் தேதியும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Next Post

ஜி.பி.முத்து வெளியேறுகின்றாரா? வேண்டாம் தலைவரே ரசிகர்கள் குமுறல் ....

Sat Oct 22 , 2022
பிக்பாஸ் சீசன் 6 ல் இருந்து இந்த வாரம் ஜி.பி. முத்து வெளியேறுவதாக ப்ரோமோ வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. இந்தவாரம் ஜி.பி.முத்து டாஸ்கில் வெற்றி பெற்று முதல்வாரத்தின் கேப்டன் ஆனதால் அவரை நாமினேட் செய்யமுடியாது. இது ஒரு நல்ல வாய்ப்பு என்றாலும் அவர் தாமாக முன்வந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தனது குடும்பத்தை பிரிந்து […]
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஜிபி முத்து..!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

You May Like