அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை…! வானிலை மையம் கொடுத்த அலர்ட்…!

rain

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிஸ் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம்!. ராசிக்கு ஏற்ப பலன்கள் என்ன?.

Sat Sep 20 , 2025
சூரிய கிரகணம் முக்கிய வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சந்திரன் வரும் ஒரு வானியல் நிகழ்வாகும்.வானியல் நிகழ்வு ஒரு காட்சி மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார, அறிவியல் மற்றும் வானியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (செப்.21) அன்று […]
Solar eclipse amavasai

You May Like