12-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

cyclone rain 2025

12-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். நாளை கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஒவ்வொரு ஆண்டும் திருமணம்!. மனைவிகள், 30 குழந்தைகள், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் படைசூழ சென்ற மன்னர்!. வைரல் வீடியோ!

Tue Oct 7 , 2025
தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து மன்னர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அபுதாபி விமான நிலையத்தில் பிரமாண்டமாக நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது. தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கி வருகிறார். 1986 முதல் எஸ்வாட்டினி நாட்டை ஆண்டு வரும் 57 வயதான இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான […]
eswatini swaziland king

You May Like