திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (63). மர அறுப்பு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவருக்கு கூடலூர் பகுதியைச் சேர்ந்த பூமணி (42) என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் கள்ளக்காதலியான பூமணிக்கு தெரியவரவே இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அவிநாசியை அடுத்து சின்னேரிபாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரின் மீது இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பூமணி தான் கொண்டு வந்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னராஜ் -ன் பின் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய சின்னப்பராஜின் மீது கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சின்னப்பராஜ் உயிரிழந்தார். இதையடுத்து அவிநாசி காவல் நிலையம் சென்ற பூமணி நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த சின்னப்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை நெறிமுறைகள்…! டிராய் அறிவிப்பு…!



