சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரங்களின்படி, தலைநகர் சென்னையின் பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அரசியல் வட்டாரத்தில் கவனம் அதிகரித்துள்ளது.
கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் சுமார் 85 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது. அதிக வாக்குப்பதிவு இந்த முறை தேர்தலின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, 8.30 மணியிலிருந்து இயந்திர வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்ப கட்ட நிலவரங்களில் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சென்னையைப் பொருத்தவரை, பல முக்கிய தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுக வலுவாக உள்ள பகுதிகளில் புதிய அரசியல் மாற்றத்தின் சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள அதிகமாக உள்ள தொகுதிகளில் தவெக முன்னேற்றம் காணப்படுவது, இளைஞர் வாக்குகள் மற்றும் புதிய அரசியல் மாற்றத்திற்கான ஆதரவு என அரசியல் நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இருப்பினும் சில தொகுதிகளில் இன்னும் கடும் போட்டி நிலவி வருவதால், இறுதி முடிவுகள் வரை நிலைமை மாறக்கூடும் என கூறப்படுகிறது.
Read more: Flash: 73 தொகுதிகளில் தவெக முன்னிலை.. இரண்டாவது இடத்தில் அதிமுக..! செம ஷாக்கில் திமுக..



