சூப்பர் வாய்ப்பு..! TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…!

Mk Stalin Tn Govt 2025

TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


போட்டிதேர்வுகளுக்கு திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருள் தொடர்பில், TNPSC Group II & IIA போட்டித்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பானது மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.07.2025 அன்று முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடத்தப்படவுள்ளது.

எனவே, TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இப்பயிற்சி மாணவர்கள் வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 32 என்ற முகவரியில் நேரில் அணுகவும். 044-22500134, 9361566648 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Vignesh

Next Post

சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. தேவசம்போர்டு முக்கிய அறிவுறுத்தல்..!!

Wed Jul 16 , 2025
Sabarimala Ayyappa temple entrance opens today.. Devaswom Board important instructions..!!
sabanimala 2

You May Like