Tn Govt: தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை மட்டும்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Tn Government registration 2025

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 மற்றும் 06.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான 05.06.2025 மற்றும் 06.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடஉத்தரவிடப்பட்டுள்ளது.

Read More: அதிரடி…! தகவலின்றி மாணவர்கள் லீவ் எடுத்தால், பெற்றோர் பள்ளிக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்…!

Vignesh

Next Post

திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்ட ஜோடிக்கு 100 சவுக்கடி தண்டனை!. இந்தோனேசியாவில் பயங்கரம்!

Thu Jun 5 , 2025
இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]
indonesia panishment 11zon

You May Like