டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் இன்று காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாளான இன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்களும், தனிப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.