Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் இதோ..

1730197140 4512 2 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அட்சய திருதியையொட்டி நேற்று வழக்கம் போல் நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது. இந்த நிலையில், இன்று தங்கம் உயரும் என்று எதிர்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது.

அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: மலச்சிக்கலால் ரொம்ப கஷ்டப்படுகிறார்களா..? தீர்வு தரும் பீர்க்கங்காய்.. குறைச்சு எடை போடாதீங்க..!

English Summary

Today Gold Rate | Gold price suddenly low..! Here is today’s situation..

Next Post

புஷ்பா 2 திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ராஜாவான துரந்தர் 2.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

Mon Apr 20 , 2026
Dhurandhar 2 dethrones Pushpa 2 to become 3rd highest grossing Indian film worldwide, earns over Rs 1748 crore
Dhurandhar 2

You May Like