தொடர் சரிவில் தங்க விலை.. தங்கம் வாங்க, இது சரியான நேரம்.!

சில மாதங்களாகவே தங்கத்தின் விலையானது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகின்றது. கடந்த ஜூலை முதல் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தி இருக்கிறது.


இதனை தொடர்ந்து உடனடியாக தங்க விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. அதன் பின், தற்போது ஏற்ற இறக்கத்துடன் தங்க விலை இருக்கிறது.

அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4735 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் 37,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இருப்பினும் தற்போது கிராம் ஒன்றுக்கு 45 ரூபாய் இன்று குறைந்துள்ளது. எனவே, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 4690 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 37,520 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி கிலோ 1800 குறைந்து 60,500 ரூபாயாகவும் ஒரு கிராம் 60.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1newsnationuser5

Next Post

சாலையில் சென்ற பெண்.. மானபங்கப்படுத்திய ஆட்டோ டிரைவர்.. 500மீ தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.!

Sat Oct 15 , 2022
ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்து அவரை ஆட்டோவோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து தகாத முறையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சல் போட்டார். உடனே அவரது கையை உதறிவிட்டு […]
1855694 950870 930785 harassment

You May Like