தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை!!!

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. இன்று(டிசம்பர்-6) தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..


அதன்படி இன்று காலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Newsnation_Admin

Next Post

தடுப்பூசியால் புற்றுநோய் அதிகரிப்பு...! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

Tue Dec 6 , 2022
தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தன. இதற்கான தீர்வு என்ன என்பதே மக்களின் கேள்விக்குறியாக […]
images 2022 12 06T060404.078

You May Like