மாதம் ரூ.750 உதவித் தொகையுடன் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

money e1749025602177

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 9499055642, 9499055618 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வேண்டுமா?. இனி புது ரூல்ஸ்.! ரூ.2 லட்சம் வரை நிர்ணயம்!. தமிழக அரசு அதிரடி!

Sun Aug 31 , 2025
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான ஃபேன்சி நம்பர் வாங்குவது ஏல முறைக்கு மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து துறை இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதிக தேவை உள்ள நம்பர்களுக்கு e-bidding முறையில் ஏலம் விடப்படும். இதன் மூலம் அரசுக்கு […]
fancy numbers vehicles 11zon

You May Like