தக்காளி விலை திடீர் உயர்வு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? – இல்லத்தரசிகள் அதிர்ச்சி

tomato price

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.


தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வரத்தை பொறுத்து நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு வரத்து குறைவால் கோயம்பேடு உள்பட நகர சந்தைகளில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோக்கு ரூ.10 உயர்ந்து, மொத்த சந்தையில் கிலோ ரூ.50 அளவுக்கு விற்பனை ஆகிறது; சில்லரை விற்பனையில் கிலோ ரூ.60 என்று விலை நிலவுகிறது.

ஆந்திரா–தமிழக முக்கிய உற்பத்திப் பகுதிகளில் பெய்த மழை, வரத்து பாதிப்பு, பண்ணைகளில் அறுவடை தாமதம் ஆகியவை காரணமாக சந்தைகளில் தக்காளி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வரத்து சீரானால் விலை குறையும்; இல்லையெனில் அடுத்த சில நாட்களில் கூடுதல் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வளாகத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

Read more: TVK Vijay: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையுமா தவெக..? – திட்டவட்டமாக விஜய் சொன்ன பதில்

English Summary

Tomato prices have suddenly increased.. Do you know how much a kilo costs..? – Housewives are shocked

Next Post

பெங்களூருவின் பழைய பெயர் என்ன?. இப்படியொரு வரலாறு இருக்கா?. தெரிஞ்சுக்கோங்க!

Fri Aug 8 , 2025
பெங்களூரு, இன்று இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஒரு நவீன நகரமாக வளர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவங்களும், ஸ்டார்ட்அப்களும், உயர்ந்த வாழ்க்கை முறைகளும் இந்த நகரத்துக்குப் பெருமையை சேர்க்கின்றன. ஆனால், இந்த நகரத்தின் பெயர் ஒரு மிகவும் எளிமையான மற்றும் ஆச்சரியமான வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. பெங்களூருவின் பழைய பெயரையும் அது எப்படி உருவானது என்பதையும் ஆராய்வோம். பெங்களூருவின் பழைய பெயர் என்ன? பெங்களூருவின் பழைய பெயர் பெண்டகலூரு, […]
bangalore history 11zon

You May Like