தமிழகமே..! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாள்…!

election 2025

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், கணக்கீட்டுப் படிவம் ஒப்படைக்க நாளை கடைசி நாளாகும்.


தலைமை தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நாளை 11-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 6 கோடியே 40 லட்சத்து 84,624 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணி 99.55 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதாவது 6 கோடியே 38 லட்சத்து 25,877 வாக்காளர்களின் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல், வரும் ஜனவரி 15-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Vignesh

Next Post

Alert: கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...!

Wed Dec 10 , 2025
பாக்நீரிணை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதி, தென்தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, குமரிக் கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 13-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை […]
cyclone rain

You May Like