நாளையே கடைசி..!! ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் வேலை..!! மாதம் ரூ.50,000 வரை சம்பளம்..!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காலியாக உள்ள 2 பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு வரும் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட விவரம் :

பணி : டிசைன் இன்ஜினியர் ( மெக்கானிக்கல்)

காலியிடங்கள் : 2

சம்பளம் : மாதம் ரூ. 50,000

வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரொட்க்ஷன், உற்பத்தி, இண்டஸ்டீரியல் இன்ஜினியரிங் என ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை :

நேர்முக தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்பிஐ வங்கி மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.avnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி தேவையான சான்றிதழ்களை சுய சான்றொப்பம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The Works Manager, Admin, Engine Factory, Avadi, Chennai – 600 054

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 18.04.2024

Read More : ”நான் இருக்கும்போதே இன்னொரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து”..!! சண்டை பயிற்சியாளரின் மனைவி கதறல்..!!

Chella

Next Post

பத்திரப்பதிவு முடிந்த உடனேயே நீங்கள் நிலத்தின் உரிமையாளராக முடியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Wed Apr 17 , 2024
இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. அதனால் தான் வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், நிலத்தை பதிவு செய்தாலும், நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது என்பதை […]

You May Like