14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; ரக்ஷா பந்தன் அன்று நடந்த கொடுமை..!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் சண்ட்ஹனி கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை ரக்‌ஷபந்தன் அன்று அவரது உறவினர் வீட்டிற்கு தனது உறவுக்கார சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட சென்றுள்ளார். சகோதரனின் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த அந்த கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் அந்த சிறுமியை கடத்தி சென்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோரம் சிறுமியை இழுத்து சென்ற அந்த கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த சாலை வழியாக காரில் சென்றவர் காரை நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். இதனால், சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதை தொடர்ந்து படுகாயங்களுடன் சிறுமியை மீட்ட அந்த நபர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பிறகு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அந்த சிறுமியை அனுமதித்தார்.

மருத்துவமனையில் சேர்த்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய பவன்குமார், அங்கித்குமார், தினேஷ்குமார், இமாமுதீன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், தப்பி ஓடிய நான்கு பேரில் ஒருவனை மட்டும் கைது செய்துள்ளனர், மற்ற மூன்று பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரக்‌ஷாபந்தன் அன்று சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

சொத்துக்காக தந்தை மற்றும் சகோதரிகளை கொலை செய்த நபர் தப்பி ஓட்டம்.. போலீசார் வலைவீச்சு..!

Mon Aug 15 , 2022
உத்தர பிரதேசத்தில் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரிஜ்பால் (60). இவரது மனைவி சசிபிரபா. இவர்களுக்கு அமர் என்ற லக்ஷ் என்ற பெயரிலான மகனும், ஜோதி (25) மற்றும் அனுராதா (17) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பிரிஜ்பால் தனது மகன் அமரிடம் சொத்தில் பங்கு இல்லை என சொல்லியுள்ளார். மேலும் மாதங்களுக்கு முன்பு சொத்தில் இருந்து அமரின் பெயரை நீக்கியதுடன், அவருக்கான உரிமையையும் நீக்கியுள்ளார். இதனால், அமர் ஆத்திரத்தில், […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like