அணிவகுத்து வந்த உதயநிதி ஸ்டாலின் கான்வாய்….! குறுக்கே பாய்ந்த ஆட்டோவால் பரபரப்பு….!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமா துறையில் பிஸியாக இருந்தார்.கடந்த 2018 ஆம் வருடம் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த சட்டசபை தேர்தலிலேயே அதாவது சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலிலேயே போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு சமீபத்தில் அவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டு இருக்கிறார் அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை எடப்பாடி வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்த உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுக்கிடையில் சில குளறுபடி ஏற்பட்டது.

அதாவது பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பின் தொடர்ந்து மற்ற அமைச்சர்களின் வாகனங்களும் வந்து கொண்டிருந்தன இந்த நிலையில் கொண்டாம்பட்டி அருகே அமைச்சர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று போக்குவரத்து விதியை மீறி மிக நீண்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அமைச்சர்களின் கால்வாய் வாகனங்களுக்குள் புகுந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு வாகன ஓட்டுநர்கள், கான்வாய்க்குள் வந்த ஆட்டோவில் மோதாமல் இருக்க தங்களுடைய வாகனங்களை இடது புறமாக தரப்பினர் இதனால் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திட்டின் மீது வாகனங்கள் மோதி நின்றது ஆகவே பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து பிரேக் போட்டு நின்றது. வாகன ஓட்டுனர்களின் சாமர்த்தியம் காரணமாக, மற்ற வாகனங்களில் மோதாமல் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனை அடுத்து உடனடியாக அந்த சரக்கு வாகனம் ஓரம் கட்டப்பட்ட பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கால்வாய் தடை இன்றி அங்கு இருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. அதன் பிறகு கான் வாய்க்குள் கம்பியுடன் நுழைந்த சரக்கு வாகன ஓட்டுனரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்த காணொளியை தற்சமயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை வருகிறது.இந்த விபத்தில் யாருக்கும் காயமோ வாகனங்களுக்கு சேதாரமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

’யாரப்பா நீ’..!! பணத்தை திருடிவிட்டு ஆறுதல் கடிதம் எழுதிய திருடன்..!! மனம் மாறிய கடை உரிமையாளர்..!!

Sun Jan 29 , 2023
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டம் பனியானா பகுதியைச் சேர்ந்தவர் கோமாராம். இவர், இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி வழக்கம் போல கடையை திறந்த இவர், கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் கடை கல்லாவில் பணம் திருடுபோனதையும் பார்த்துள்ளார். அப்போது, அங்கு ஒரு கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரு பக்கத்தில் கடிதம் […]
’யாரப்பா நீ’..!! பணத்தை திருடிவிட்டு ஆறுதல் கடிதம் எழுதிய திருடன்..!! மனம் மாறிய கடை உரிமையாளர்..!!

You May Like