கொரோனா 4-வது அலை..? நேற்று ஒரே நாளில் 16,135 பேருக்கு தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது…

நாட்டில் கடந்த 3 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இந்த சூழலில், அதிகரித்து வரும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் மற்றும் ஆக்ரா விரைவுச் சாலையின் லக்னோ சுங்கச்சாவடியிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது..

மேலும் கொரோனா கிளஸ்டர்களைக் கண்காணிக்கவும், மரபணு வரிசைமுறையை தீவிரப்படுத்தவும், கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) மற்றும் மருத்துவமனைகளில் இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. அதன்படி நேற்று ஒரே நாளில் மேலும் 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது… நேற்று 16,103 பேருக்கு தொற்று உறுதியான இன்று சற்று அதிகரித்து 16,035ஆக அதிகரித்துள்ளது.. நேற்று ஒரே நாளில் 19,958 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.. நாடு முழுவதும் இதுவரை 197.90 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3,32,976 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது…

Maha

Next Post

குதிரையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்..! வைரல் வீடியோ உள்ளே..!

Mon Jul 4 , 2022
உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் செல்லும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மழைக்காலம் வந்தாலே போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிராஃபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. மேலும், வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதுவும் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலையை சொல்லவா வேண்டும். மழை, டிராஃபிக் எல்லாவற்றையும் சமாளித்து முட்டி மோதி டெலிவரி செய்தால் சில […]
’எனக்கு தெரியும் நீ இன்னும் என்ன மறக்கல’..!! தவறுதலாக EX-க்கு உணவு ஆர்டர் செய்த Swiggy வாடிக்கையாளர்..!!

You May Like