கடந்த சில வாரங்களாக கொரோனா இறப்பு அதிகரித்து வருகிறது… WHO எச்சரிக்கை

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது..

கடந்த சில வாரங்களாக COVID-19 தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. குறித்து எச்சரிக்கை எழுப்பியுள்ளது. உலக சுகாதார அமைப்பு தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. மேலும் பல நாடுகளில் ஓமிக்ரான் துணை வகைகளால் இயக்கப்படும் பரவல் அலைகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது.. கொரோனா வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்..

சில நாடுகளில் 70 சதவீத தடுப்பூசி கவரேஜை எட்டியிருந்தாலும், கணிசமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் பிற ஆபத்தில் உள்ள குழுக்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால், இறப்புகள் ஏற்படும். தொடர்ந்து, சுகாதார அமைப்புகள் அழுத்தத்தின் கீழ் இருக்கும் மற்றும் உலகளாவிய மீட்பு ஆபத்தில் இருக்கும்…” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ஆசிரியர்கள் தலைமறைவு...

Thu Jul 28 , 2022
பீகாரில், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தின் பக்கரிதயல் துணைப்பிரிவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மதிய உணவை உட்கொண்டதாகக் கூறப்படும் சில மணிநேரங்களுக்குப் பிறகு குறைந்தது 37 மாணவர்களுக்கும் ஒரு சமையல்காரருக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவின் தரம் குறித்து ஆசிரியர்களிடம் குழந்தைகள் புகார் கூறியதையடுத்து, ஆசிரியர்கள் பள்ளியை […]

You May Like