பாலியல் கோளாறுகளுக்கு பலாப்பழ விதைகள் பெஸ்ட்!… எண்ணற்ற மருத்துவ குணங்கள் இதோ!

பலாப்பழ விதைகளை சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அந்தவகையில், பாலியல் கோளாறுகளை சரிசெய்ய இது பெரிதும் உதவுகிறது.

பலாப்பழ விதைகளில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இதன் நன்மைகள் குறித்து அவர் கூறிய தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். பலாப்பழ விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது. எனவே பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும்.பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்புரை, மாகுலர் சிதைவு எனும் கண் பிரச்சனைகளை தடுக்கிறது.

பலாப்பழ கொட்டைகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இது பாலியல் இன்பத்தைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த கொட்டைகள் பாலியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய ஆசிய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.புரத உள்ளடக்கம் நிறைந்த இந்த பலாப்பழ கொட்டைகள், தசைகளை வலுவாக்க உதவுகின்றன. உடனடி பலனை பெற, உங்கள் வழக்கமான உணவு பட்டியலில் இதனை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பலாப்பழக் கொட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது.

பலாப்பழ விதைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போராடுகிறது. பொலிவான சருமத்தை பெற, நீங்கள் பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து உங்கள் சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பலாப்பழ கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ சத்து, முடி உடைவதைத் தடுக்கிறது. இந்த கொட்டையில் உள்ள அதிகமான புரதச் சத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இரும்பு சத்து இந்த கொட்டையில் அதிகம் உள்ளதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளர்கிறது. இரும்புச் சத்து நிறைந்த இந்த விதைகள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுவதால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழ கொட்டைகளை அதிகம் சாப்பிடலாம்.

Kokila

Next Post

கவனம்...! 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்…! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு...!

Mon Mar 27 , 2023
10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெறவுள்ள ஏப்ரல் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள்‌ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள்‌ தங்களது USER ID மற்றும்‌ PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில்‌ பள்ளி மாணவ, மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த […]

You May Like