ஆன்லைன் ஷாப்பிங் Review இப்படி இருந்தால்தான் கடை ஓடும்… இல்லைனா ஆப்புதான்!!

ஆன்லைன் ஷாப்பிங் ரிவியூ பதிவுகள் இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் சரி பார்கக்ப்பட்டு கேப்டச்சா மூலம் பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வலைத்தலங்கள் அதை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தலங்கள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா என்பதைதெரிந்து கொள்ள  BIS-ல் சரிபார்த்து சான்று பெற்றுக்கொள்ளலர்ம. ஒருவேளை இதை பின்பற்றாமல் தவறான வணிக நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வலைத்தலத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

இன்றைய காலக்கட்டத்தில் ஷாப்பிங் என்றால் அது ஆன்லைன் ஷாப்பிங்தான். கடைவீதிக்கு சென்று பொருட்களை தேடி தேடி வாங்கியது ஒரு காலம். உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைனில் பொருட்களை பார்த்து பார்த்து வாங்கும் காலமாக இந்தக்காலம் மாறிவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு கிளிக் போதும், நேரடியாக ஷாப்பிங் செய்தால் கடை வீதிக்கு செல்ல கூட ஒரு ஆள் வேண்டும், சவாரி செய்ய ஆட்டோ வேண்டும், கை நிறைய பணம் வேண்டும் இது எல்லாத்தையும் விட மணிக்கணக்கா நேரத்தை செலவு பண்ண கூடுதலா நேரம் வேண்டும். ஆனால் ஆன்லைனில் கார்டில் பணம் இருந்தால் போதும் என்ன வேண்டும்னாம் ஷாப் செய்து கொள்ளலாம்.

நாம் நேரில் சென்று பொருட்களை வாங்கும் போது தொட்டு, உணர்ந்து, தரம் பார்த்து வாங்க முடியும். ஆன்லைன் ஷாப்பிங் என வந்துவிட்டால் அந்த வசதி இல்லை. நமக்கு உள்ள ஒரு ஆப்ஷன் ரெவியூ பார்த்து பொருள் வாங்குவது.

ஒரு பொருளுக்கு வந்திருக்கும் அனைத்து ரெவியூவும் உண்மையா என சந்கேம் வரும். ஆனால், பல ஆன்லைன் ஷாப்பிங் தலங்கள் போலியான ரிவியூதான் வெளியிடுகின்றன. இது பிரச்சனையாகின்றது. இது நுகர்வோருக்கு மட்டும் இன்றி விற்பனை செய்பவர்களுக்கும் பிரச்சனையாகின்றது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் போலி ரிவியூகளை தடுக்க ஐ.எஸ்.19000 :2022 என சில வழிமுறைகளை வகுத்துள்ளது. இது நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஐ.எஸ்.19000 :2022 வழிமுறைகள் Bureau of Indian Standards என்ற அமைப்பால் வகுக்கப்பட்டுள்ளது. BIS, நுகர்வோர் செயலகம், தொழிற்சாலைகள் ஆகிய மூன்றும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், இதில் பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா, உணவகங்கள், சாதனங்கள் ஆகியவற்றில் ரிவியூ அடிப்படையிலேயே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றார்கள். எனவே இது மிகவும் முக்கியம். போலி ரெவியூ அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு ஏமாற்றப்படுவதால் சிக்கலானதாக மாறுகின்றது.

Next Post

துக்க வீட்டில் உதவிக்கு சென்ற இளைஞர்... குளிர்பதன பெட்டிக்குள் உடலை வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பலி…

Wed Nov 23 , 2022
துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு ஈமக்கடன்கள் ஒரு பக்கம் நடந்து வந்தன. குளிர்பதன பெட்டிக்கு கூறப்பட்டதை அடுத்து அமரர் […]

You May Like