சாதனை…! தென்னக இரயில்வே மூலம் கடந்த மாதம் ரூ.2319 கோடி வருவாய்…!

தென்னக இரயில்வே சரக்குப் போக்குவரத்தின் மூலம் நடப்பு 2023-24–ம் நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ரூ.2319 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

2023 நவம்பர் மாதத்தில் தென்னக ரயில்வே 3.289 டன் சரக்கு ஏற்றுதல் பதிவு செய்து, ரூ.291 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டில் நவம்பர் 2023 வரை 26.082 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு தென்னக ரயில்வே ரூ.2319.255 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வருவாயை விட இது ரூ. 16.52 கோடி அதிகமாகும். 2023 ஏப்ரல் – நவம்பர் 2023 காலகட்டத்தில் 26.082 மில்லியன் டன் சரக்குகளை தென்னக இரயில்வே கையாண்டுள்ளது.

கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட இது 5.25 சதவீதம் அதிகமாகும்.2023 நவம்பர் மாதத்தில் மட்டும், தென்னக ரயில்வே 3.289 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. இது நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகபட்சமானதாகும். 2023 நவம்பரில் மட்டும் சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.291 கோடி வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வருவாய் ஆகும்.

Vignesh

Next Post

மனிதர்கள் 200 வருடங்கள் வாழ முடியும்!… ஆனால் டைனோசர்கள் இதை நடக்க விடவில்லை!

Sun Dec 3 , 2023
டைனோசர்கள் இல்லையென்றால், மனிதர்கள் தங்கள் ஆயுட்காலத்தை 200 ஆண்டுகள் வரை நீட்டித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் ஜோவா பெட்ரோ டி மாகல்ஹேஸ், மனிதர்களைப் போன்ற பாலூட்டிகளின் வயது மற்றும் ஊர்வன மற்றும் நீர்வீழ்ச்சிகளில் எவ்வாறு முதுமை நிகழ்கிறது என்பது குறித்து வலியுறுத்தியுள்ளார். அதில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக பாலூட்டிகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், டைனோசர்கள் […]

You May Like