கென்யாவில் சுற்றுலா பயணி ஒருவர் யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. இணையவாசிகளிடையே இந்த வீடியோ பரவலான கோபத்தை தூண்டியுள்ளது.. இதுகுறித்து கென்ய அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்..
வனவிலங்கு சரணாலயத்தில் இருப்பதாகக் கூறப்படும் அந்த நபர், பிரபலமான உள்ளூர் பிராண்டான டஸ்கர் பீரை குடித்துவிட்டு, மீதமுள்ள பீரை யானைக்கு வழங்குவதைக் பார்க்க முடிகிறது…
இப்போது நீக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு “ஒரு தந்த நண்பருடன் ஒரு டஸ்கர்” என்ற தலைப்பில் இருந்தது. இந்த வீடியோ முதலில் @skydive_kenya கணக்கில் பகிரப்பட்டது, பின்னர் கென்ய பயனர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு அலையைத் தொடர்ந்து நீக்கப்பட்டது. இரண்டாவது கிளிப்பில், சுற்றுலாப் பயணி ஒரு காண்டாமிருகத்திற்கு கேரட்டை ஊட்டுவதைக் காணலாம். அந்த மனிதன் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை..
வீடியோவில் உள்ள யானை பூபா என்று நம்பப்படுகிறது, இது 1989 ஆம் ஆண்டு எட்டு வயதில் ஒரு கூண்டிலிருந்து மீட்கப்பட்டு சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு ஆண் யானை. இந்த காட்சிகள் ஓல் ஜோகி கன்சர்வேன்சி சரணாலயத்தில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Read More : “ட்ரம்ப் இறந்துவிட்டார்..” இணையத்தில் தீயாக பரவும் தகவல்.. கொளுத்தி போட்ட துணை அதிபர்.. என்ன நடக்குது?