கொட்டாவி விட்டதால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!. திறந்த வாயை மூட முடியாமல் தவிப்பு!. ரயிலில் பரபரப்பு!

yawn

கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொட்டாவி விட்ட இளைஞருக்கு திறந்த வாயை மூட முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார்.இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதே ரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.

‘வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ”டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது. இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம்.

Readmore: இந்தப் பக்கத்தில் தூங்கினால், உங்களுக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு வரலாம்!. இந்த தவறை செய்யாதீர்கள்!

KOKILA

Next Post

தீபாவளிக்கு முகம் பளபளக்க வேண்டுமா?. அரிசியை பயன்படுத்தி இந்த ஃபேஸ் பேக்கை டிரை பண்ணுங்க!.

Sun Oct 19 , 2025
தீபாவளி பண்டிகை வந்துவிட்டது, அலங்காரம் மற்றும் ஷாப்பிங் செய்யும் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் வீடுகளை சுத்தம் செய்து சுத்தம் செய்வது முகத்தில் தூசி, அழுக்கு மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் பண்டிகைக்கு தனது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, சந்தையில் இருந்து விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை நாட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வீட்டிலேயே அரிசி ஃபேஸ் பேக்கை எளிதாக தயாரிக்கலாம், […]
rice face pack

You May Like