36 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலியான சோகம்..! ஈரானில் ஆரம்ப பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்..! தொடரும் பதற்றம்..!

iran attack

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார்.


ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய எச்சரிக்கை அமலில் உள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து தங்கள் வான்வெளியை மூடிய நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கும், பல விமான நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

மேலும், தெஹ்ரானின் சில பகுதிகளில் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டுவிட்டது.. ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு, இஸ்ரேல் ராணுவம் ஆப்ரேஷன் ரோரிங் லயன் என்ற பெயர் வைத்துள்ளது..

இந்த நிலையில் இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது.. ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தியவர்களை அவர்களின் செயல்களுக்கு வருத்தப்பட செய்வோம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக முழுமையாக தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட இந்த புதிய ராணுவத் தாக்குதல், சர்வதேச சட்டங்களையும் மற்றும் ஐ.நா சபை விதிகளையும் மீறும் செயல்.. இந்த தாக்குதலை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நேரடியாக மீறும் நடவடிக்கையாக ஈரான் கருதுகிறது. அதனால், உறுதியான பதிலடி கொடுக்க உரிமையை ஈரான் முழுமையாக வைத்துள்ளது.. பிராந்திய அமைதியும் நிலைத்தன்மையும் காக்க, பதற்றம் அதிகரிக்காமல் இருக்க ஈரான் மக்கள் எப்போதும் பொறுமையும் கட்டுப்பாடையும் காட்டி வந்துள்ளனர்,” என்றும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 36 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.. ஈரானில் ஆரம்ப பள்ளியைக் கூட விட்டு வைக்காமல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.. இந்த தாக்குதலில் 36 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. உயிரிழந்த 36 பேரும் பெண் குழந்தைகள் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.. மேலும் பல குழந்தைகள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

மேலும், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.. சூழ்நிலை காரணமாக, “முடிந்தவரை, அமைதியாக இருக்கும் இடங்களில் இருக்கவும், உங்களால் முடிந்தால் மற்ற இடங்கள் மற்றும் நகரங்களுக்கு பயணிக்க வேண்டும்” என்று ஈரான் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது..

RUPA

Next Post

"சொத்து வாங்குபவர்களுக்கு புதிய சலுகை"..!! அடியோடு மாறும் ரியல் எஸ்டேட் விதிமுறைகள்..!! எப்போது அமல்..?

Sat Feb 28 , 2026
மத்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொத்து பரிவர்த்தனைகளின் போது பான் (PAN) எண் விவரங்களை குறிப்பிடுவதில் நிலவி வந்த சில நடைமுறை சிக்கல்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பான் கார்டு கட்டாயம் : தற்போதைய சட்டப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீடு போன்ற அசையா […]
Pan Card 2025

You May Like