பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை வாக்குச்சாவடி அலுவலகர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.
மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் பிரிவு 21 மற்றும் 24-ன் படி சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்துத் தொகுதிகளிலும் சுமூகமாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தால் வாக்குச்சாவடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேட்பாளர்களுக்கான தகுதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல், சின்னங்களை ஒதுக்கீடு செய்தல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் ஆன்லைன் மதிப்பீடு போன்ற அனைத்து நடைமுறைகள் குறித்தும் வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.