சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Alde) பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Alde) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும். 18 முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை கிடைக்க வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம் ஆகும். மேலும் சென்னை உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.