போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை!

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, பணியின் போது ஊழியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற அநாகரிக ஆடைகள் அணிவது, அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்” என அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் ஆண்கள் பேண்ட் சட்டை, பெண்கள் புடவை அல்லது சுடிதார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Next Post

1994-ல், ரூ.500க்கு தாத்தா வாங்கிய SBI பங்குகள்..! லட்சங்களை பெற்ற பேரன்!

Tue Apr 2 , 2024
எஸ்.பி.ஐ. வங்கியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பங்கு வாங்கி இப்போது லாபம் பெற்ற பேரன், அது தொடர்பாக நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதலத்தில் போஸ்ட் செய்துள்ளார். சண்டிகரில் வசிக்கும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தன்மய் மோதிவாலா வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மிகப்பழைய பங்கு சான்றிதழ் ஒன்றை கண்டெடுத்தார். அதில் அவரின் தாத்தா 1994-ம் ஆண்டு ரூ.500 மதிப்புள்ள எஸ்பிஐ […]

You May Like