நுழைவுச்சீட்டை பெற இன்று முதல் 10.2025 மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக். 12-ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வெழுத 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 10.07.2025 அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணிகளுக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) 30.09.2025 அன்று வெளியிடப்பட்டது . விண்ணப்பித்த தேர்வர்களுக்கு ‘ தேர்வு கூட நுழைவுச் சீட்டு ” ( Hall Ticket ) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இன்று முதல் 10.2025 மாலை 05.00 மணிவரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



