இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்..

6873285 newproject21 1

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார்.

காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார் என்று அவர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி திரு. ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே? இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க..

மு.க ஸ்டாலின் அவர்களே! அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று! ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : “அமித்ஷா சொல்வதே வேத சத்தியம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்..” மீண்டும் கொளுத்திப் போட்ட அண்ணாமலை..

RUPA

Next Post

"திருட்டில் ஈடுபட்டால் விசா கிடையாது" அமெரிக்க கடையில் திருடிய இந்திய பெண்..!! - தூதரகம் எச்சரிக்கை

Thu Jul 17 , 2025
Indian woman caught stealing items worth Rs 1.11 lakh from store in US,
us

You May Like