“நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” – இஸ்ரேல் ஈரான் தாக்குதல் குறித்து டிரம்ப்

நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் இஸ்ரேல் மீது கடுங்கோபத்தில் இருந்தது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இதனையடுத்து மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியது.

இந்த தாக்குதல் சம்ப்வம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, “இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்படி நடக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Post

மக்களே...! கோடை கால மின் வெட்டு...! கவலை வேண்டாம்... மத்திய அரசின் புது முயற்சி...!

Sun Apr 14 , 2024
கோடை காலத்தில் இந்தியாவில் நிலவும் அதிகபட்ச மின் தேவையை சமாளிக்கும் வகையில், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிகபட்ச மின்சார உற்பத்தியை உறுதி செய்வதற்காக, மின்சார சட்டம், 2003 பிரிவு 11-ன் கீழ் அனைத்து எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எரிவாயு அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களில் (GBSs) பெரும் […]

You May Like